வெள்ளி, 22 ஜனவரி, 2016

என்னை மறந்துவிடு




வழி மீது
           
          விழி வைத்து

                    காத்திருக்க,

வளியிலே

              வாசனையாய்
     
                          அவளும் வர,

வலியிலே

                  இருந்த மனம்

                               சற்றே ஆற....


அவள் வந்ததோ....

                ' என்னை மறந்துவிடு'  

                                  என்று கூற.

அறியாப் பருவம்



அவ பள்ளிக்கூடம் வரல
அது பரவால்ல
ஆனா காரணம் தெரியல
வயித்துவலின்னாய்ங்க,
என்னத்த தின்னாளோ?

ஒருவாரம் காணோம்!
உக்காந்துட்டாளாம்.
கால்வலினு சொல்லலியே!?
ஒருத்தருமே சொல்லல,
என்னாவோ புரியல.

வந்தா ஒருநா

என்னை அறியாம என் புருவம் கேட்டது 'என்ன? '
அவளையே அறியாம
சிரிச்சுட்டு போய்ட்டா..
அந்த சிரிப்புல
என்னவோ புரிஞ்சுது..!

ஓ இதுதான் 
அறியாப்பருவமா?!.




வியாழன், 21 ஜனவரி, 2016

கணக்கான காதல்




என் வாத்தியார் பொண்ணு பேரு சோல,
கணக்கு சொல்லிக் கொடுப்பதுதான் வேல,
காதல் உருவாச்சு !
வாத்தி அறிஞ்சாச்சு !
பிரம்பெடுத்து உரிச்சுவிட்டார் தோல.

கோவத்துல  நான் வர
கூடவே அவளும் வர
காதல் கருவாச்சு !
வாந்தி வந்தாச்சு !
பெத்தெடுத்து குடுத்திட்டா புள்ள.

காலம் பலவாச்சு
கருப்பு முடி வெள்ளையாச்சு
வளர்த்த மகவொண்ணும் காதல்
வலையில் விழுந்தாச்சு
கல்யாணம் முடிச்சாச்சு.

சேர்த்துவச்ச காசெல்லாம்
மருத்துவச் செலவாச்சு,
மனைவிக்கும் வயச்சாச்சு
பேரன் பேத்தி பார்த்தாச்சு...
பொய் சொல்ல விருப்பமில்ல - இன்னும்
போய்ச்சேர மனச்சில்ல...




புதன், 20 ஜனவரி, 2016

கவிதை எழுத


கவிதை எழுத

காற்றில் அமர்ந்தல்
நேற்றில் நாளையை
ஊற்றிக் கலத்தல்
போற்றிப் புகழ்தல்
தூற்றி வாரி
சேற்றில் கவிழ்த்தல்
வேற்றிணை நினைத்தல்
ஆற்றின் திசையினை
மாற்றி அமைத்தல் - அல்லது
ஆற்றோடு பயணித்தல்.
காற்றில் மீண்டும்....
கவிதை எழுத அமர்ந்தல்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

My 7 Q s for satisfactions

My 7 Q s for satisfactions

Quality of food
Quantity of sleep
Queens in mind
Qualify in basics
Quick in work
Question to all
Quiet naturally

விரிவான புத்தகம் எழுத
விசயம் உள்ளது,
வினாடிகள் வேண்டும் நிறைய...

திங்கள், 18 ஜனவரி, 2016

தமிழ்



விழி மூடியும்
வாசிக்க முடியும்
நெஞ்சில் நிறுத்தி
நேசிக்க முடியும்
சிந்தனையில்
சுவாசிக்க முடியும்
இந்த கவிதையை,
உங்களுக்கும் தமிழ்
உயிரென்றால்.

வண்ணத்துப்பூச்சி



கருப்பு வெள்ளையாய் 
கற்பனை செய்ய 
அழகு குறையும்,
என் வண்ணத்துப்பூச்சி 
மாநிறம் !